மூன்றாவது முறையாக மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜியின் திருணமூல் கட்சியை சேர்ந்த குண்டர்கள், முஸ்லிம்கள் திட்டமிட்டு ஹிந்துக்கள் மீது நடத்திய வன்முறை வெறியாட்டத்தில், பல ஹிந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் பலர் எங்கிருக்கிறார்கள், என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை. பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டனர், வீடுகள், கடைகள் வாகனங்கள் எரிக்கப்பட்டன. சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. சூறையாடப்பட்டன. பல்லாயிரம் பேர் அசாம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். ‘இது அனைத்தும் பொய், திட்டமிட்டே பொய்யான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. மக்களை திசை திருப்பும் முயற்சி இது’ என திருணமூல் கட்சியை சேர்ந்த டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட தலைவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில், முதல்வர் மமதா, வன்முறையில் 16 பேர் மட்டுமே இறந்ததாகவும் அதில் 8 பேர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் என்றும் கூறி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் மமதாவின் இந்த அறிவிப்பு வன்முறை நடைபெற்றதை அவரே ஒப்புக்கொள்கிறார். அவரது கட்சியினர் பொய் கூறுகின்றனர் என்பதையே வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.