ஆண்டுதோறும் ஹிந்துக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சிவராத்திரி இந்த வருடமும் கோயில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதேபோல, ஈஷாவிலும் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டுக்கான விழா, கடந்த மார்ச் 8 அன்று ‘யக் ஷா’ விழாவுடன் துவங்கி, மூன்று நாட்களாக நடைபெற்றது. பாரதத்தின் பிரபலப் பாடகர்களின் பாடல்கள், நாட்டியங்கள் போன்றவற்றுடன் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ரஷ்யன், சைனீஸ் உள்ளிட்ட13 மொழிகளில் நேரடியாக இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது. பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் இதில் பங்குகொண்டனர்.