ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லாலை முஸ்லிம் பயங்கரவாதிகள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து தனது கருத்தைத் தெரிவித்த கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், “மதராசாக்களில் படிக்கும் குழந்தைகளுக்கு யாராவது மத நிந்தனை செய்தால் தலையை துண்டிப்பதுதான் அதற்கான தண்டனை என கற்பிக்கப்படுகிறது. இது கடவுளின் சட்டமாகவும் கற்பிக்கப்படுகிறது. இதுபோல அதன் அறிகுறிகள் வெளிவரும்போது நாம் கவலைப்படுகிறோம், ஆனால் அதற்கான ஆழமான காரனத்தை நாம் கவனிக்க மறுக்கிறோம். மதரஸாக்களில் என்ன கற்பிக்கப்படுகிறது என்று அறிய அரசு அங்கு ஆய்வு செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.