மேட் இன் சைனா – புலம்பும் பாகிஸ்தான்

பாரதம் ஏற்படுத்திவரும் வலுவான வான் பாதுகாப்பு திறன்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஆண்டு மார்ச் 12ம் தேதி, பாகிஸ்தான் சீனா தயாரித்த குறைந்த, நடுத்தர உயர விமான பாதுகாப்பு அமைப்பு (LOMADS) LY 80 ஐ அறிமுகப்படுத்தியது. ஆனால், சோதனையில் தரம் குறைந்த இந்த சீன தயாரிப்பு ஏவுகணைகள் சரியாக வேலை செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது மூன்று இடங்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற மேலும் ஆறு அமைப்புகளை நிறுவ சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் போட்டுள்ளது. தற்போது, இந்த கோளாறுகளை சரிசெய்ய, சீன தொழில்நுட்ப வல்லுநர்கள் கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானில் தங்கி உள்ளனர்.