ஐ.ஐ.டி மும்பை தயாரித்துள்ள உலகின் முதல் மைக்ரோ சென்சாரை அடிப்படையாகக் கொண்ட நானோ ஸ்னிஃபர் என்ற வெடிச்சுவட்டை அடையாளம் காணும் கருவையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிமுகப்படுத்தினார். ‘நானோ ஸ்னிஃபர், 100 சதவீதம் பாரதத்திலேயே தயாரிக்கப்பட்டது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இது ஒரு மைல்கல். சுய சார்பு பாரதம் குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் பார்வைக்கு இது மேலும் வலு சேர்க்கும்’ என அப்போது அமைச்சர் தெரிவித்தார். இந்த சாதனம் 10 வினாடிகளுக்குள் வெடிபொருட்களைக் கண்டறியும். வெடிபொருட்களை வெவ்வேறு பிரிவுகளிலும் வகைப்படுத்தி அடையாளம் கண்டு வகைப்படுத்தும். இது அனைத்து வகையான இராணுவ பயன்பாடு வெடிபொருட்கள், நாட்டு வெடிபொருட்களையும் கண்டறியும் திறன் கொண்டது. மேலும், இந்த நானோ ஸ்னிஃபர் சூரிய ஒளியிலும் படிக்கக்கூடிய வகையில் அதி நவீன வண்ணத்திரை, விவரங்களை ஒலி வடிவிலும் கேட்கக்கூடிய ஆடியோ வசதி என பல அம்சங்களைக் கொண்டுள்ளது.