மேக் இன் இந்தியா ஏகே 203

ரஷ்ய அதிபர் வருகிற டிசம்பர் மாதம் பாரதத்திற்கு சுற்றுபயணம் வர உள்ளார் இதனை முன்னிட்டு நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அதிநவீன ஏகே 203 இயந்திர துப்பாக்கிகள் தயாரிக்கும் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதியில் இதற்கான தயாரிப்பு தொழிற்சாலையை பாரதமும் ரஷ்யாவும் இணைந்து சுமார் 5,124 கோடி ரூபாய் செலவில் அமைக்கின்றன. இங்கு 7 லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 70 ஆயிரம் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு 32 மாதங்களில் டெலிவரி செய்யப்படும் இவை ரஷ்ய தயாரிப்பு பாகங்களை கொண்டிருக்கும். இந்த துப்பாக்கிகள் தற்போது இந்திய ராணுவத்தில் பயன்பாட்டில் உள்ள இன்சாஸ் ரக துப்பாக்கிகளுக்கு மாற்றாக வீரர்களுக்கு வழங்கப்படும்.