மா வெங்கடேசன் தகவல்

தஞ்சை மாவட்டம் அரியலூரை சேர்ந்த ஹிந்து பள்ளி மாணவி, கிறிஸ்தவ மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் சம்பந்தமாக, தேசிய துப்புரவு ஆணையத் தலைவர் மா வெங்கடேசன் தகவல் ஒன்றை குறிப்பிட்டுள்ளார். அதில், ‘சுவாமி சகஜானந்தர் கல்வி கற்பதில் கூர்மையான மாணவராக விளங்கினார். அமெரிக்கன் ஆற்காடு கிறிஸ்தவ உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, வகுப்பில் எந்த மாணவரும் அவரோடு போட்டிப் போட்டு படிக்க முடியவில்லை. பைபிளை மனதிற்குள் உள்வாங்கி ஒப்பிப்பதில் கிறிஸ்தவ மாணவர்களை மீறிய ஆற்றல் பெற்றிருந்தார். இதனால் பாதிரிகள், அவரை கிறித்தவ மதத்தை தழுவ செய்ய முயற்சிகளை மேற்கொண்டனர். சகஜானந்தர் ஏற்க மறுத்ததால் படிப்பைத் தொடர முடியவில்லை. இதனால் சகஜானந்தர் படிப்பை இடையிலே நிறுத்திய சம்பவம்தான், ஏழை எளிய மக்களின் கல்வி எழுச்சிக்கான வரலாறாக மாறியது. கிறித்தவத்தில் சேர மறுத்ததால், அவருடைய படிப்பு, விடுதி செலவுக்கான தொகையைத் திருப்பிக் கேட்டனர். மதம் மாற மறுத்ததால் கல்வி மறுக்கப்பட்டது, கட்டணம் கட்டாய வசூலாக மாறியது அவர்களின் மதவெறியை உணர்த்துகிறது. சுவாமி சகஜானந்தர் மதமாற்றத்தை ஏற்காமல் பள்ளியை விட்டு வெளியேறினார். ஆனால், அந்த அரியலூர் மாணவியோ உலகத்தை விட்டே வெளியேறினார்’ என குறிப்பிட்டுள்ளார்.