பொய் கூறும் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பொய்யான, தவறான செய்திகளையும் வெளியிட்டு மக்களை திசைத்திருப்ப என்றுமே தயங்கியதில்லை என்பதற்கு அக்காலம் தொட்டு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில்கூட ராகுல் காந்தி, டெல்லியில் பாலியல் பலாத்காரத்தால் உயிரிழந்த 9 வயது குழந்தையின் பெற்றோர் புகைப்படத்தை போக்சோ சட்டத்தை மீறி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அது குறித்து கேட்டதற்கு, அவர்களின் சம்மதத்துடன் வெளியிட்டதாக பொய் கூறினார் ராகுல். மற்றொரு நிகழ்வாக, சமீபத்தில், ஹரியானாவில் காவலர்களுக்கும் விவசாய போராட்டத்தினருக்கும் இடையே நடைபெற்ற தள்ளுமுள்ளுவில் காவலர்கள் தாக்கியதாக ஒரு விவசாயியின் தையல் போடப்பட்ட உடைந்த மண்டையின் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு அரசியல் செய்தது காங்கிரஸ். ஆனால் அது உண்மையில் சில காலம் முன்பு முஸ்லிம் குண்டர்களால் தாக்கட்டு காயமடைந்த பசுப்பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த சோனு என்பவரின் புகைப்படம் என்பது நிரூபிக்கப்பட்டது. தங்களது குட்டு வெளியானதை அடுத்து டுவிட்டர் பதிவை அவசரமாக நீக்கியது காங்கிரஸ் கட்சி. எனினும் அசாம் காங்கிரசின் டுவிட்டர் பக்கம், ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் இம்ரான் பிரதாப்கரி உள்ளிட்டோர் அந்த போலி படத்தை நீக்காமல் பகிர்ந்து வருகின்றனர்.