மதிய உணவு திட்டப் பணம்

நாடு முழுதும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கான மதிய உணவு திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்களை தவிர, மீதமுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 60 சதவீத உணவு செலவை மத்திய அரசு தருகிறது. 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கின்றன. ஜம்மு காஷ்மீரில் 90 சதவீத செலவை மத்திய அரசு ஏற்கிறது. அதற்கான நிதி செலவு செய்யப்படாமல் உள்ளது. மாணவர்களின்  நலனை கருத்தில் கொண்டு, மதிய உணவு திட்டத்தின்கீழ் உணவுக்கு ஆகும் செலவில், மத்திய அரசின் பங்கை, மாணவர்களுக்கு வழங்கவும் அதனையும் அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக டெபாசிட் செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள், 11.8 கோடி பேர் இதனால் பயனடைவர்.