இஸ்லாமிய அடிப்படைவாதம் கேரளத்தில் தலைவிரித்தாடுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இது உக்கிரம் அடைந்து வருகிறது. மதச்சார்பற்ற கட்சிகள் என்று சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கேரள அரசியல் கட்சிகள் இஸ்லாமிய அடிப்படை வாதம் என்பதை கண்டுகொள்வதே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு இந்த கட்சிகள் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுத்து வருகின்றன. பிற சமயங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் முஸ்லிம்களாக கட்டாயமாக’ மதம் மாற்றப்படுகிறார்கள். கேரளத்தில் லவ் ஜிகாத் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரள முன்னாள் டிஜிபி லோக்நாத் பெகரா அண்மையில் அப்பிராந்தியத்தைச் சேர்ந்த நியூஸ் சேனல் ஒன்றுக்கு இதுகுறித்து விரிவாக பேட்டியளித்துள்ளார். அவர் குறிப்பிட்டதன் சாராம்சம் இது:
”முஸ்லிம்களாக மாற்றப்படும் பிற மதங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். நன்கு படித்த இளம்பெண்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எளிதாக மூளைச்சலவை செய்கிறார்கள். பயங்கரவாத அமைப்புகளுக்கு படித்தவர்கள்தான் தேவைப்படுகிறார்கள். எனவேதான் படித்தவர்கள் நிறைந்த கேரளத்தை குறிவைத்து பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. கேரளா முழுவதும் ஸ்லீப்பர் செல்கள் இயங்கி வருகின்றன என்பதையும் நிராகரித்துவிட முடியாது. மாநிலம் முழுவதும் பயங்கரவாதிகளுக்கு என பயிற்சி முகாம்கள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில் இப்போது காணப்படும் நிலவரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
கேரள போலீஸாரின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என விமர்சனமும் எழுந்துள்ளது. பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கண்டும் காணாமலும் இருக்குமாறு போலீஸாருக்கு அரசியல் அழுத்தம் இருக்கவும் வாய்ப்புள்ளது. பல இடங்களில் வெடிகுண்டு தயாரிப்புக்கான கச்சாப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அடர்ந்த காட்டுப் பகுதியான பாதமில் ஜெலடின் குச்சிகள், டெட்டோனேட்டர்கள், வயர்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு லோக்நாத் பெகரா இவ்வாறு கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாதிகளுக்கும் கேரள அரசியல்வாதிகளுக்கும் இடையே நெருக்கமான தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். காட்டுத்தீ கண்பாணிப்பாளர்கள் என்ற பெயரில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், வாதம் பகுதியில் காட்டுத்தீ கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவில்லை. அங்கு பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதுபற்றிய செய்திகள் அரசல் புரசலாக வெளியே கசிந்தன. பிப்ரவரி மாதம் 16ம் தேதி வரை இப்பணியில் யாரும் அமர்த்தப்படவில்லை. இந்த தேதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாளில்தான் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஒற்றுமைப் பேரணி நடைபெற்றது. இது நடந்து முடியவேண்டும் என்ற திட்டத்துடன்தான் பணி நியமனம் தாமதப்படுத்தப்பட்டது. இதிலிருந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவுக்கு மாநில அரசும் அரசியல்வாதிகளும் உறுதுணையாக செயல்படுவது அம்பலமாகியுள்ளது.
கேரளத்துக்கு வந்து குவியும் முஸ்லிம் நாடுகளின மாணவர்கள் :
கேரளத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு இஸ்லாமிய நாடுகளிலிருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்து குவிகின்றன. குறிப்பாக சிரியா ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. பெரும்பாலும் முனைவர் பட்டத்திற்காகவும் கல்லூரி பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பதவிகளுக்காகவும் இந்த விண்ணப்பங்கள் அணுப்பப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு 150 வெளிநாட்டு மாணவர்களின் விண்ணப்பங்களை ஐ.சி.சி.ஆர். ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் 25 பேர் மட்டுமே சேர்ந்தார்கள். கொரோனா தாக்கம் காரணமாக மற்றவர்களால் சேரமுடியவில்லை. முஸ்லிம்கள் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், கேரளாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேர்வது தொடர்பான சந்தேகம் வலுத்துள்ளது. அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். பின்னணி உடையவர்கள். கடந்த ஆண்டு பயங்கரவாதிகள் தொடர்பான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டது. அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கேரளத்தில் பரவலாக காலூன்றியுள்ளனர்.
இந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலிருந்து செங்கொடிகளும் ஆயுதக் குவியலும் கைப்பற்றப்பட்டன. வெளிநாடுகளுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி பயங்கரவாதிகள் பயணிக்கிறார்கள். 2016 –17 காலகட்டத்தில் கேரளத்தில் இருந்து மட்டும் 21 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர்வதற்காக வெளிநாடு சென்றுள்ளனர். கேரளா முன்னாள் டிஜிபி. லோக்நாத் பெகராவும் இதுகுறித்து கருத்துகளை தெரிவித்துள்ளதுடன் லவ் ஜிகாத் உக்கிரமடைந்து வருகிறது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக முன்னேற்றத்திற்கு உதவி என்ற அடிப்படையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்டாய மதமாற்றத்தை அரங்கேற்றி வருகிறது. எனவே, கேரளத்தில் உளவு அமைப்புகளை செம்மையாக செயல்பட வைக்கவேண்டும். சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கேரளாவிற்கு வந்துள்ள மாணவர்களை தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்கவேண்டும். பெருமளவில் அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன் தற்காப்பு நடவடிக்கைகளையும் களையெடுப்பு செயல்பாடுகளையும் தீவிரப்படுத்தவேண்டும்.
காஷ்மீரில் மதமாற்றம் செய்யப்படும் சீக்கியர்கள்:
இரண்டு இஸ்லாமியப் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு முஸ்லிம்களாக மதமாற்றம் செய்யப்பட்டார்கள். இது ஜம்மு – காஷ்மீரில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள், இந்த கட்டாய மதமாற்றத்தை வன்மையாகக் கண்டித்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் ஹிந்து பெண்களையும் சீக்கிய பெண்களையும் கடத்தி சென்று கட்டாய மதமாற்றம் செய்வது இஸ்லாமிய அடிப்படை
வாதிகளுக்கு சகஜமானது.
இப்போது இதே பாணி நடவடிக்கையில் ஜம்மு – காஷ்மீரில் மேற்கொள்ள இஸ்லாமிய அடிப்படைவாதிகள் முற்பட்டுள்ளனர். இதற்கிடையே கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்றப்பட்ட சர்ச்சைக்கிடமான சீக்கியப் பெண் மீண்டும் தனது குடும்பத்துக்கு திரும்பினார். அவர் சுக்பீர் சிங் என்பவரை மணந்து கொண்டார். இதைப்போல வேறு பல சம்பவங்கள் நடந்துள்ளன. நான்கு சீக்கியப் பெண்கள் வலுக்கட்டாயமாக கடத்தி செல்லப்பட்டு இஸ்லாமியர்களாக மதமாற்றம் செய்யப்பட்டனர் என்ற தகவல் வந்துள்ளது.
சீக்கியர்களின் முக்கிய அமைப்பான அகால்தக்த், இஸ்லாமிய அடிப்படை வாதிகளின் செயல்பாட்டை தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ளதைப்போல ஜம்மு – காஷ்மீரிலும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஜம்மு – காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஷ் சின்ஹாவுக்கு கடிதமும் எழுதி அனுப்பியுள்ளனர்.
துணைநிலை ஆளுநர் மனோஷ் சின்கா, கட்டாய மதமாற்றம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். சீக்கியப் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.
சிரோமணி, குருத்வாரா பிரபந்தக் கமிட்டியின் தலைவர் பிபிர் ஜாஹிர் கௌர், கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கிய குடும்பத்திடம் நலம் விசாரித்தார். இத்தகைய கொடூரம் எதிர்காலத்தில் நடக்காதவாறு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். சொந்த மதத்தை விட்டு யாரும் விலகக் கூடாது” என்று அவர் யோசனை கூறியுள்ளார். இதற்கிடையே ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த நஷீர் உல் இஸ்லாமின் முக்தி ”கட்டாய மதமாற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கவில்லை. இவ்வாறு ஊக்குவிப்பது எங்களுக்கு உடன்
பாடானதல்ல” என்று தெரிவித்துள்ளார். ”நாங்களும் சீக்கியர்களும் சகோதரர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்ட சீக்கியப் இளம்பெண் ஒருவர், வயதான முஸ்லிம் ஆணுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டார். அந்த இளம் பெண்ணுக்கு 18 வயதுதான் ஆகிறது. ஆனால் முஸ்லிம் முதியவருக்கு 60 வயதாகிவிட்டது.
இதற்கிடையே, மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்களில் ஒருவரான முகமது ரஷித் குரேஷி, நாங்கள் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை ஆதரிக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், புதிதாக வெளிச்சத்துக்கு வந்த இரண்டு கட்டாய மதமாற்றங்களில் ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண் தானாகவே மதம்மாறி மாற்று சமயத்தை சேர்ந்தவரை திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார் என்றும் முகமது ரஷித் குரேஷி குறிப்பிட்டுள்ளார்.
சீக்கிய பெண்களை மதமாற்றம் செய்து முஸ்லிம் முதியவர்களுக்கு திருமணம் செய்துவைக்கும் அக்கிரமங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று சீக்கிய இளைஞர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இதை நடைமுறைப்படுத்தத் தவறினால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதிகளே பொறுப்பேற்கவேண்டும் என்றும் சீக்கிய இளைஞர்கள் உறுதிபட உரைத்துள்ளனர்.
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : அடவி வணங்கி