லவ் ஜிஹாத் காவல்துறை ஒப்புதல்

கேரளாவில் பணி ஓய்வு பெற்று வெளியேறும் கேரள காவல்துறைத் தலைவர் லோக்நாத் பெஹ்ராவால், ஒரு உள்ளூர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘முஸ்லிம் அடிப்படைவாதிகளின் எழுச்சி, பயங்கரவாத ஆதரவு கடந்த சில ஆண்டுகளாக கேரளாவில் வளர்ந்து வருகிறது. முஸ்லீம் அல்லாத பெண்கள், சிறுமிகளை முஸ்லிம் மதத்திற்கு மாற்றுவதற்காக லவ் ஜிஹாத் நடைபெறுகிறது. அதற்கான அனைத்து ஆதரவுகளையும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் வழங்கி வருகின்றன. அந்த பெண்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றனர். படித்தவர்களே அதிகம் இலக்காகிறார்கள். பல வெளிநாட்டு பயங்கரவாதிகள் தங்கள் அமைப்புக்கு கேரள மக்களை தேர்ந்தெடுக்கின்றனர். மாநிலத்தில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. கேரளாவில் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது’ என தெரிவித்தார்.