உ.பி’யில் லவ் ஜிஹாத் முயற்சி

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை மாலை, 12ம் வகுப்பு படிக்கும் ஒரு ஹிந்து சிறுமியை கழுத்து மற்றும் முகத்தில் பிளேடால் கடுமையாக தாக்கியுள்ளார் முகமது டேனிஷ் கான் என்ற முஸ்லிம் நபர். சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் தாய் கூறியபோது, அந்த முஸ்லிம் நபர் கடந்த 2 ஆண்டுகளாக எனது மகளை பின் தொடர்ந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு, நாங்கள் அவருடன் பேச அவரது வீட்டிற்குச் சென்றோம். அவர் எங்களிடம் மன்னிப்பு கேட்டு இனி என் மகளை பின்தொடர மாட்டேன் என்று உறுதியளித்தார். அவனுடைய தாயும் மன்னிப்புக் கேட்டார். ஆனால் இன்று என் மகள் பயிற்சி மையத்திற்கு சென்றபோது அவர் எனது மகளை தாக்கியுள்ளார். என் மகளின் உடலில் பல இடங்களில் வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளது. அவை ஆழமானதாக உள்ளது என தெரிவித்துள்ளார். தலைமறைவான முகமது டேனிஷ் கான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெண்களை குறிவைத்து, குறிப்பாக மைனர் பெண்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றும் லவ்ஜிஹாத் குறித்து புகார்கள் ஏராளமாக வருகின்றன. இந்த வழக்குகளில் பெரும்பாலும் முஸ்லிம் ஆண்கள் தங்கள் பெயரையும் அடையாளத்தையும் மறைத்து பெண்களை உறவுகளில் சிக்க வைத்து மதமாற்றம் செய்வது அல்லது மதமாற்ற திருமணம் செய்ய மறுத்தால் அவர்களைக் கொலை செய்வது, திருமணத்திற்கு பின் கைவிட்டு வேறு பெண்ணை தேடுவது போன்றவற்றில் ஈடுபடுகின்றனர். ஒருசிலர், அந்த பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, வெளிநாட்டு பயங்கரவாதிகளிடம் பாலியல் அடிமைகளாக விற்பது போன்றவற்றிலும் ஈடுபடுகின்றனர் என்பது சிந்திக்கத்தக்கது.