தமிழகத்தில் மற்றொரு லவ் ஜிகாத் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் திம்மம்பட்டி கிராமம் அருகே உள்ள உப்பத்துக்காடு பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ படிக்கும் மாணவி சுமத்திரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்தஜனவரி 18ம் தேதி பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டார். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல்துறையினர் இதனை இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த மரணம் குறித்து யாரும் எதிர்ப்புத் தெரிவிக்காததால் அது எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை.
மாணவியின் அலைபேசியை கைப்பற்றிய காவல்துறை அதனை ஆய்வு செய்தது. அதில், அவர் ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு அடிக்கடி அழைத்து நீண்ட நேரம் பேசியதும், தற்கொலைக்கு முன் அனைத்து அழைப்புகள், வாட்ஸ்அப் பதிவுகளை அழித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. சைபர் பிரிவு காவலர்கள் அதை மீட்டனர். இது குறித்து அங்கு வசிக்கும் அமீர்கான் என்ற முஸ்லிம் இளைஞரை காவல்துறையினர் விசாரித்தனர். அவர், சேலம் அருகே ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். விசாரணைக்குப் பிறகு மீண்டும் அழைக்கும்போது விசாரணைக்கு வரும்படி கூறினர்.
இதுகுறித்து பெயரை வெளியிட விரும்பாத அப்பகுதியைச் சேர்ந்த ஒரு நபர், “அமிர்கானின் தாய், சுமத்திராவுக்கு பள்ளியில் பாடம் கற்பித்தார். அமீர்கானின் தந்தை ரஹமதுல்லா உள்ளூர் ஜமாத்தின் தலைவர். அமீர் கான் அந்த சிறுமியிடம் நட்பு கொண்டிருந்தார். இந்த நட்பு மெல்ல வளர்ந்தது. இதையறிந்த மாணவியின் பெற்றோர் ஜனவரி 15 அன்று அமீர்கானின் வீட்டிற்கு சென்று மகளின் எதிர்காலத்தை கெடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளனர். முன்னதாக, அமீர் கான் மாணவியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியுள்ளார். ஆனால், பிறகு மாணவியின் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்த்துள்ளார்” என கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய வழக்கறிஞர் ராமலிங்கம், “இது காதல் விவகாரம் அல்ல. அமீர்கானின் இன்ஸ்டாகிராம், முகநூல் பதிவுகள், அரட்டைகளைப் பார்த்தால், இது லவ் ஜிகாத் என்பது தெளிவாகத் தெரிகிறது. அமீர்கானுக்கு இன்னும் எத்தனை பெண்களுடன் தொடர்பு இருக்கிறதோ தெரியவில்லை. இதனை காவல்துறை விசாரிக்க வேண்டும். அவனது லவ் ஜிஹாத் வலையில் ஹிந்துப் பெண்கள் விழுந்துள்ளனர். ஹிந்துப் பெண்களின் பாதுகாப்பு தற்போது ஆபத்தில் உள்ளது. ஹிந்து அமைப்புகள் அதை முறியடிக்க உத்தியை வகுக்க வேண்டும்” என தெரிவித்தார். இந்து முன்னணி தொண்டர் ஒருவர், “இப்பகுதியில் முஸ்லீம்கள் ஆதிக்கம் அதிகம். அதனால்தான் இங்கு இந்து முன்னணி வளர்ந்து வருகிறது” என தெரிவித்தார்.