மண்டம் அதிகள் முகாமில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் ஹிந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் கவர்ந்து திருமணம் செய்து கொண்டு மதம் மாற்றுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில், மண்டம் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை தமிழ் ஹிந்து பெண், மண்டம் மேற்கு தெருவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞரை கடந்த பிப்ரவரியில் திருமணம் செய்துள்ளார். இதேபோல அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் மற்றொரு இலங்கை ஹிந்துப் பெண் சமீபத்தில் காணாமல் போனார். அந்தப் பெண்ணும் மண்டபம் பகுதியைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் இளைஞரும் காதலித்து வந்ததாகவும், அந்த இளைஞருடன் அந்தப் பெண் சென்று இருக்கலாம் எனவும் அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்த வழக்குப் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் குறித்து தமிழக காவல் துறையின் உளவுத்துறை அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில், ‘மண்டம் முகாமில் உள்ள இந்துப் பெண்களைக் குறிவைத்து உள்ளூர் முஸ்லிம் இளைஞர்கள் செயல்படும் இந்தப் போக்கு அதிகரித்து வருவது லவ் ஜிஹாத் அப்பகுதியில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கக்கூடும். அத்துடன் முஸ்லிம்களின் ஜிஹாதி பிரிவினர், இந்தப் பகுதியை தங்களது செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளவதைக் தடுக்க முடியாது. எனவே, இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள பிற இலங்கை அகதிகள் முகாமில் நிகழ்கின்றனவா எனக் கண்காணிக்க வேண்டும். அகதிகள் முகாமில் வசிப்பவர்களிடம், இதுகுறித்த விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும். அனைத்து அகதிகள் முகாம்களிலும் லவ்ஜிஹாத் இனி நடக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கை அகதிகள் முகாம்களிலும் மாநில உளவுத் துறையினர் ரகசிய விசாரண நடத்தி வருகின்றனர். முகாமுக்கு அடிக்கடி வந்து செல்வோர், முகாமில் வசிக்கும் நபர்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கும் வெளிநபர்கள், முகாமை விட்டு வெளியே தங்கியிருந்து வேலை செய்யும் அகதிகள், அவர்களது தினசரி நடவடிக்கைகள் குறித்த தகவல்களைச் சேகரிக்கப்பட்டு வருகின்றன.