ஹிந்துவாக நடித்து லவ் ஜிஹாத்

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த ஆரிப் என்பவர், அமித் என்ற ஹிந்து இளைஞராக நடித்து, ஒரு பெண்ணுடன் நட்பாக பழகியுள்ளார். சில நாட்கள் கழித்து ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அந்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் முஸ்லிம்மாக மதம் மாறி தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், அந்தரங்க வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஆரிப்பின் குடும்ப உறுப்பினர்களும் கூட அந்த பெண்ணை மிரட்டினர். இதுகுறித்த அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில் ஆரிப் அவரது உறவினர்களான நூர் ஆலம். பேபி, ஷெஹ்னாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என வல்துறை எஸ்.பி குன்வர் அனுபம் சிங் தெரிவித்துள்ளார்.