அலகாபாத் பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கீதா ஸ்ரீவாஸ்தவா, மாவட்ட நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘தன் வீட்டின் அருகிலுள்ள மசூதியில் இருந்து தினமும் ஓதப்படும் அஸானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார். ‘இது அனைவரின் தூக்கத்தையும் சீர்குலைக்கிறது. சரியான தூக்கமின்மை காரணமாக தலைவலி, வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என தெரிவித்துள்ள அவர், தான் எந்த மதத்திற்கும் எதிரானவர் கிடையாது. தன் கோரிக்கையால் யாரின் வாழ்க்கையும் பாதிக்காது. இந்திய அரசியலமைப்பு அனைத்து பிரிவுகளுக்கும் சமமான மதச்சார்பின்மை மற்றும் அமைதியான நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையும் (PIL No. 570 Office 2020) இதற்கு மேற்கோள் காட்டியுள்ளார். இந்த கடிதம் காவல்துறை கமிஷனருக்கும், ஐ.ஜி.க்கும் அனுப்பப்படும் என மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.