காங்கிரசை சேர்ந்த முன்னாள் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், பல கோடி ரூபாய் முறைகேடு, குற்றத்தை மறக்க அரசு அதிகாரிகளுக்கு பணம், ஆப்பிள் ஐ போன் உள்ளிட்டவற்றை லஞ்சமாக வழங்கியது போன்ற முறைகேடு புகார்கள் உள்ளன. இவ்வழக்கு விசாரணைக்காக அவர் ஆஜராக ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் அமலாக்கத்துறையின் முன் ஆஜராகவில்லை. இவ்வழக்கு விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் நாட்டை விட்டே தப்பிக்கலாம் என கருதப்பட்ட நிலையில், அவர் வெளியேறுவதை தடுக்க அமலாக்கத்துறை அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த லுக்அவுட் நோட்டீஸ் ஒரு வருடத்திற்கு அல்லது அமலாக்கத்துறை அதனைத் திரும்பப் பெறும் வரை செல்லுபடியாகும்.