யுனெஸ்கோ தமிழகக் கோயில் பட்டியல்

காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட 11 கோயில்களுக்கு உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுரகேஸ்வரர் கோயில், கைலாசநாதர், வைகுண்ட பெருமாள், முக்தீஸ்வரர், இறவாதீஸ்வரர், பிறவாதீஸ்வரர் கோயில்கள் மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வரதராஜப் பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் உள்ளிட்ட 11 கோயில்கள்  உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அங்கீகரிப்பதற்கான யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இடம் பெற்றுள்ளன.