சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நேரு உள் விளையாட்டரங்க நிகழ்ச்சியில் தமிழை உயர்த்தி பிடித்தார் பிரதமர் மோடி. ஆனால், சமூக நீதி பற்றி பிரதமர் இருந்த மேடையில் முதல்வர் பேசியது எள்ளி நகையாடத்தக்க விஷயம் எனகூறி தி.மு.கவின் சமூக நீதி குறித்த உண்மை முகத்தை தோலுரித்து காட்டினார். ரயில் வராத தண்டவாளத்தில் தலையை வைத்துவிட்டு தமிழ்மொழியை காப்பது போல் முதல்வர் பேசுகிறார், கல்வியை அழித்ததற்கான பட்டத்தை திமுக.,வுக்கு தான் தர வேண்டும், இலங்கை பிரச்சனையில் தி.மு.கவின் செயல்பாடு என தி.மு.க குறித்து யாரும் பேச அஞ்சும் பல்வேறு உண்மைகளை பட்டியலிட்டார். மேலும், ஊடக குதர்க்கவாதிகளின் உண்மை நோக்கத்தையும் ஆத்திரப்படாமல் ‘அண்ணா உங்க 200 ரூபா வந்திரும் அண்ணே, ரெண்டாயிரமா வாங்கிக்கோங்கண்ணே..’ என பொறுமையாக எடுத்துரைத்தார். முக்கியமாக, ஜூன் முதல் வாரத்தில் தி.மு.க., அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன். இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம். சிலரின் பதவிகூட இதில் போகலாம் என கூறி பல தி.மு.கவினரின் வயிற்றில் புளியை கரைத்தார்.