கொரோனா சிகிச்சையில் அதிமதுரம்

மத்திய அரசின் பயோடெக்னாலஜி துறையின் (டி.பி.டி) தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தின் (என்.பி.ஆர்.சி) விஞ்ஞானிகள் குழு, நமது சித்தா, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பரவலாக சளி, இருமல், நாள்பட்ட காய்ச்சல் ஆகியவைகளுக்கு  பயன்படுத்தும் ‘அதிமதுரம்’ என்ற மருந்து, கொரோனா சிகிச்சைக்கு ஒரு சிறந்த மருந்தாக பயன்படும் என ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது.

கொரோனா வைரஸ், மனித உயிரணுக்களை பாதிக்கும்போது, ​​உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு சைட்டோகைன்கள் எனப்படும் புரதங்களின் தொகுப்பை வெளியிடும். சில நேரங்களில் இது கட்டுப்பாடற்றதாக மாறும், இது கடுமையான வீக்கம், நுரையீரல் திசுக்களில் திரவம் சேர்தலுக்கு வழி வகுக்கும். இதனால், கடுமையான சுவாசக் கோளாறு, செல்கள் இழப்பு, உறுப்பு செயலிழப்பு போன்றவை ஏற்படும். அதிமதுரத்தில் உள்ள கிளைசிரைசின் மூலக்கூறுகள் இந்த சிக்கலைத் தவிர்க்க உதவும் என்று NBRC விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மேலும், இந்த கிளைசிரைசின் வைரஸ் நகலெடுப்பையும் 90 சதவீதம் வரை குறைப்பதையும் அவர்கள் கண்டறிந்தனர்.