அமெரிக்க செனட்டர்கள் வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அதில், தலிபான் அரசின் தற்போதைய பதிப்பு அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், தலிபான்களை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும், ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சராக சிராஜுதீன் ஹக்கானி நியமிக்கப்பட்டதற்கு தங்கள் கவலையை தெரிவித்தனர். ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவத்தை அவசரமாகத் திரும்பப் பெற்றதற்கு ஜோ பிடென் நிர்வாகத்தை செனட்டர்கள் விமர்சித்தனர்.