சாதனையாளர்களை சந்திப்போம்

சென்னை அமெரிக்க துணைத் தூதரகம் சார்பில் ‘புலம் பெயர்ந்த சாதனையாளர்கள்’ என்ற தலைப்பில் இணையவழி கலந்துரையாடல் நிகழ்ச்சி தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த புலம் பெயர்ந்த பாரத தேசத்தவர்கள் பங்கேற்று தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஜூலை 28ல் முதல் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதில், பாரத வம்சாவளியைச் சேர்ந்த நாசா பொறியாளர் ஸ்வாதி மோகன் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்கிறார். செவ்வாய் கிரகத்தில் நாசாவின் ரோவர் வாகனத்தை வெற்றிகரமாக தரை இறக்கிய பணியில் ஸ்வாதி மோகன் முக்கிய பங்காற்றினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://statedept.zoomgov.com/webinar/register/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். சென்னைஅமெரிக்க துணைத் தூதரகத்தின் முகநூல் பகுதியான https://www.facebook.com/chennai.usconsulate/ என்ற முகவரியிலும் இந்த நிகழ்ச்சியை காணலாம். இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு சாதனையாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.