மக்கள் தீர்மானிக்கட்டும்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை போலவே’ தற்போது நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இதற்கு, முஸ்லிம் அடிப்படைவாதிகள், பிரிவினைவாதிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேசமயம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் இந்த படத்திற்கு வரி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல, திராவிட மாடல் ஆட்சியில் இந்த திரைப்படம் தமிழகத்தில் மறைமுக அழுத்தத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில், பா.ஜ.க மூத்த தலைவரும் பிரபல நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில், “தி கேரளா ஸ்டோரியை தடை செய்ய போராடுபவர்களுக்கு என்ன பயம்? அப்பட்டமாக சொல்லப்பட்ட உண்மை அல்லது உண்மையின் ஒரு பகுதியாக இருப்பதை உணரும் பயம். எதைப் பார்க்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். மற்றவர்களுக்காக நீங்கள் முடிவு செய்ய முடியாது. நிகழ்ச்சிகளை ரத்து செய்ய தமிழக அரசு நொண்டிக் காரணங்களைச் சொல்கிறது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.