பாரதம் வந்து தங்கள் கருத்தை நிரூபிக்கட்டும்

பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் (PIIE) இல் பாரதப் பொருளாதாரத்தின் வலிமை மற்றும் விரிவாக்கம் குறித்த உரையாடலின் போது, சீதாராமன் தனது கருத்துக்களை வழங்கினார். அப்போது, பாரதத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன, எதிர்க்கட்சியினரின் எம்.பி அந்தஸ்து பறிக்கப்படுகிறது என்பது உள்ளிட்டமேற்கத்திய ஊடகங்களால் வைக்கப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. பாரதத்தின் மீதான இந்த எதிர்மறை மேற்கத்திய கருத்துகள் பற்றிய கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உண்மையான கள அனுபவம் இல்லாத நபர்களால் பரப்பப்படும் செவிவழி செய்திகளை நம்புவதற்குப் பதிலாக, நிலைமையை நேரில் காண அவர்களை அழைக்கிறேன். அவர்கள் பாரதத்திற்கு வந்து தங்கள் கருத்தை நிரூபிக்கட்டும். அதற்கான பதில் பாரதத்துக்கு தொடர்ந்து வரும் முதலீட்டாளர்களிடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் பாரதத்திற்கு தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். முதலீடுகளை செய்கிறார்கள். களத்தில் நேரில் சென்ற பார்க்காமலேயே அறிக்கைகளை வெளியிடும் நபர்களால் உருவாக்கப்படும் கருத்துக்களைக் கேட்பதை விட, பாரதத்தில் முதலீடுகளை செய்ய ஆர்வமுள்ள ஒருவராக, பாரதத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வாருங்கள் என்று நான் அவர்களுக்கு அழைப்பை விடுக்கிறேன்.

உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகையை பாரதம் கொண்டுள்ளது. மேலும் அந்த மக்கள்தொகையின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்து வருகிறது. பாரதத்தில் அவர்களின் வாழ்க்கை கடினமானது, அரசின் ஆதரவுடன் அவர்களின் வாழ்க்கை கடினமாக உள்ளது அல்லது கடினமாக மாற்றப்பட்டு இருக்கிறது என்ற அவர்களின் கருத்து உண்மையாக இருந்தால், 1947ல் இருந்ததை விட முஸ்லிம் மக்கள் தொகை எண்ணிக்கை பாரதத்தில் இவ்வளவு பெருகி இருக்குமா? உண்மலியில், பாகிஸ்தானை விட பாரதத்தில் முஸ்லிம் மக்கள் சிறப்பாக வாழ்கின்றனர். சுதந்திரத்தின்போது பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. அப்போது பாகிஸ்தான் தன்னை இஸ்லாமிய நாடாக அறிவித்தது, ஆனால் சிறுபான்மையினர் பாதுகாக்கப்படுவார்கள் என்று கூறியது. ஆனால் அங்கு உண்மையில் ஒவ்வொரு சிறுபான்மையின மக்களின் எண்ணிக்கையும் அங்கு தொடர்ந்து குறைந்து வருகிறது. பாகிஸ்தானில் அவர்கள் அழிந்து வருகின்றனர். சில முஸ்லிம் பிரிவினரும் அழிக்கப்பட்டுள்ளனர். முஹாஜிர்கள், ஷியாக்கள் மற்றும் நீங்கள் பெயரிடக்கூடிய ஒவ்வொரு சிறுபான்மையின குழுவிற்கும் எதிராகவும் வன்முறை நிலவுகிறது. ஆனால், பாரதத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களும் பணி செய்கின்றனர், தங்கள் வியாபாரத்தை செய்கிறார்கள், அவர்களின் குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மத்திய அரசால் வழங்கப்படுகிறது” என்று கூறினார்.

மேலும், பாரதத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை கண்டித்துள்ள நிதியமைச்சர், “எனவே பாரதத்தில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் ஒரு தவறான அறிக்கை. அது மத்திய அரசின் மீது பொய்ய்யான பழி சுமத்தும் செயல். 2014 முதல் இப்போது வரை அவர்களின் மக்கள் தொகை குறைந்துள்ளதா? ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் இறப்புகள் விகிதாசாரம் அதிகமாக உள்ளதா சொல்லுங்கள்? எனவே, இந்த அறிக்கைகளை எழுதும் இவர்களை பாரதம் வருமாறு நான் அழைக்கிறேன். அவர்கள் பாரதம் வந்து தங்கள் கருத்தை நிரூபிக்கட்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

பாரதம் மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைப் பொருளாதார நாடுகள், வளர்ந்து வரும் சந்தையாக இருப்பதன் சுமையை சுமந்து வருகின்றன. ஆனாலும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பாரதப் பொருளாதாரத்தின் வளர்ச்சி பாரத மக்களை பாதுகாத்துள்ளது. பாரதத்தின் உற்பத்தி கனவுக்கு மதிப்பு சங்கிலி கட்டாயம் தேவை என்பதால் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊகத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை அறிமுகம் செய்தோம், இது உள்நாட்டு சந்தையில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சந்தையிலும் சாதகமாக வாய்ப்புகளை உருவாக்கியது. இதனால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும், நுகரும் பொருட்களும், ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் அதிகரித்துள்ளது என்று கருத்துத் தெரிவித்த அவர், உலக வர்த்தக அமைப்பிடம் (WTO) நியாயமாகவும் முற்போக்காக செயல்படவும் முன்னேற்றத்திற்கு பாடுபடவும் அழைப்பு விடுத்தார் அனைத்து நாடுகளின் கருத்தையும் கேட்குமாறு வலியுறுத்தினார்.