பாரதம் வரும் சிறுத்தைகள்

சிறுத்தையை பாரதத்தில் வரலாற்று ரீதியாக நிலைநிறுத்துவதற்காக வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதல் பற்றிய ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மத்திய அரசும், நமீபியா குடியரசு அரசும் நேற்று கையெழுத்திட்டன. இருநாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டும், பரஸ்பர மரியாதை, இறையாண்மை, சமத்துவம் ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் வனஉயிரின பாதுகாப்பு மற்றும் நிலையான உயிரி பல்லுயிர் பயன்படுத்துதலை ஊக்குவிப்பதற்கும், இரு நாடுகளும் பயனடையும் வகையிலான வளர்ச்சியை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தும். நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்தில் சிறுத்தை சிறப்பு முக்கியத்துவத்தைப் பெறுகிறது. சிறுத்தைகளை மீண்டும் பாரதத்திற்கு கொண்டு வருவது என்பது சம அளவிலான பாதுகாப்பு விளைவுகளை ஏற்படுத்தும். இது, பல்லுயிரின் சீரழிவு மற்றும் விரைவான இழப்பைத் தடுக்க உதவும். பெரிய அளவிலான கால்நடைகளைத் தாக்காமல், மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருக்கும் காரணத்தால், மாமிச விலங்குகளுக்கு மத்தியில் மனிதர்களுக்கும் சிறுத்தைகளுக்குமான முரண்பாடு மிகக் குறைவாகவே உள்ளது. வேட்டையாடும் உயிரினங்களுள் முதன்மை வகிக்கும் சிறுத்தையை மீண்டும் கொண்டு வருவது வரலாற்று பரிணாம சமநிலையை மீட்டெடுக்கிறது. இதற்காக கடந்த 2010ல் 10 இடங்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்கா, சிறுத்தைகளைக் கொண்டு வர இந்த இடம் ஏதுவாக இருக்கும் என்று கருதப்பட்டது. குனோ தேசிய பூங்காவில் தற்போது அதிகபட்சமாக 21 சிறுத்தைகள் இடம்பெறும் வசதியுள்ள நிலையில், மறுசீரமைப்பு செய்யப்பட்டதும் 36 சிறுத்தைகள் என்ற அளவிற்கு திறன் அதிகரிக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக, பாரதத்தில் சிறுத்தைகள் எந்த பகுதிகளில் முன்னர் அழிந்ததோ, அதே இடங்களில் அவற்றை மீண்டும் கொண்டு வருவது, பல்லுயிரின் பாதுகாப்பு. இரு நாடுகளிலும் சிறுத்தையின் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்காக நிபுணத்துவங்களை பகிர்வது, தொழில்நுட்ப செயல்பாடுகள், பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் ஆளுகை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றன.