பாரதம் உட்பட உலகின் பல நாடுகளின் பாரம்பரிய கலாச்சாரங்களை சீரழிப்பதில் இடதுசாரிகள் முன்னணியில் உள்ளனர். இதற்கு பல உதாரணங்களை கூறமுடியும். அவ்வகையில் மேற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை, இடதுசாரிகளின் ஆட்சி காலத்தில் இருந்தே மெள்ள காதலர் தினமாக உருமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. முஸ்லிம்களையும் பிரிவினைவாதத்தையும் ஆதரிக்கும் திருணமூல் காங்கிரசின் தற்போதைய ஆட்சியிலும் அது பின்தொடரப்படுகிறது. இந்த விழாவின்போது, பொதுவாக பெண்கள், சிறு பெண் குழந்தைகள் மஞ்சள் நிற உடை அணிவது, சிறுவர்கள் பாரம்பரிய குர்தா பைஜாமா அணிவது, புத்தகங்களை சரஸ்வதி தேவியின் காலடியில் வைப்பது போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் பின்பற்றப்படும். ஆனால், கம்யூனிஸ்டுகளின் திட்டமிட்ட ரீதியிலான ஹிந்து கலாச்சார அழிப்பு திட்டத்தால் சமீப காலமாக சரஸ்வதி பூஜை ‘காதலர் தினம்’ என்று விளம்பரப்படுத்தப்படுகிறது. அவர்கள் சமூக ஊடகங்களிலும் இதனை பரப்பி வருகின்றனர். கடந்த பிப்ரவரி 5 அன்று கொண்டாடப்பட்ட சரஸ்வதி பூஜையன்று, சில இடங்களில், ஹிந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், சரஸ்வதி பூஜை பந்தல்களில் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்தி அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது அப்பகுதி ஹிந்துக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.