ஸ்ரீராம நவமியில் இடதுசாரிகள் தாக்குதல்

ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு) பயிலும் ஏ.பி.வி.பி மாணவர்களும் ஹிந்து மாணவர்களும் அவர்கள் தங்கியிருக்கும் காவேரி வளாகத்தில் ஸ்ரீராம நவமியை கொண்டாட முடிவெடுத்தனர். அப்போதிலிருந்தே இடதுசாரி ஆதரவு மாணவர் அமைப்புகளும், முஸ்லிம் மாணவர்களும் அந்த நிகழ்ச்சியை தடுக்க பல்வேறு வழிகளில் முயற்சித்தனர். மிரட்டல்கள் விடுத்தனர். இது மதசார்பற்ற இடம் என்பதால் ஸ்ரீராம நவமியை கொண்டாடக்கூடாது, மீறி நடத்தினால் அதனை தடுப்போம், நீங்கள் செய்யும் யாகத்தில் எலும்புத் துண்டுகளை வீசுவோம் என தடுத்தனர். இதற்கு ஹிந்து மாணவர்கள் அப்படியெனில் இப்தார் நோன்பும் அதற்கு பல்கலைக் கழகம் செய்யும் செலவும் நிறுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கலகக்காரர்களின் தடைகளை மீறி ஸ்ரீராம நவமி நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடத்தப்பட்டது. யாகம் துவங்கியபோது  இடதுசாரி மாணவர்கள் எதிர்த்தனர். இதனால் விழா ஒரு பதட்டமான சூழலில் நடந்து முடிந்தது. விழாவுக்குப் பிறகு இதுகுறித்து ஒரு குழு வார்டனைச் சந்திக்க சென்றபோது திடீரென சில இடதுசாரி மாணவர்கள் ஏ.பி.வி.பி மாணவர்களை கடுமையாக தாக்கியதுடன் அவர்கள் மீது கற்களையும் வீசினர். பெண்கள், உடல் ஊனமுற்ற மாணவர்களையும் தாக்கினர். இதனால் பல மாணவர்கள் காயம் அடைந்தனர். ஆனால், விடுதியில் அசைவ உணவு இருக்க கூடாது என ஏ.பி.வி.பி மாணவர்கள் சண்டை போட்டதாகக் கூறி, உண்மை காரணத்தை திசை திருப்பி விட்டுள்ளனர் இடதுசாரி மாணவர்கள். பின்னர் இதனை கண்டித்து, ஏபிவிபி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்த இருதரப்பு புகாரின் பேரில் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.