கடந்த திங்கட்கிழமை பிற்பகுதியில் லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் நோக்கி ஆறு ராக்கெட் குண்டுகள் அனுப்பப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் லெபனானுக்குள்ளேயே விழுந்தன. இதனால் இஸ்ரேலில் எந்த பாதிப்பும் இல்லை. எனினும் லெபனானின் ராக்கெட் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் வகையில், ராக்கெட்டுகள் வீசப்பட்ட இடத்தை நோக்கி இஸ்ரேல், பதில் தாக்குதல் நடத்தியது. முன்னதாக, கடந்த வியாழன் அன்றும் லெபனானில் இருந்து மூன்று ராக்கெட்டுகள் அனுப்பப்பட்டன. ஆனால், ஆவை அனைத்தும் மத்தியதரைக் கடலில் சென்று விழுந்தன. லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதக் குழு கடந்த வெள்ளிக்கிழமையன்று சிரியாவில் இருந்து மூன்று ராக்கெட் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசினர். ஒரு ராக்கெட் சிரியாவிற்குள் விழுந்தது, மற்ற இரண்டும் கோல்டன் ஹைட்ஸ் என்ற திறந்தவெளிகளில் சென்று வெடித்தன. தற்போதைய இஸ்ரேல் பாலஸ்தீன மோதலுக்கு முக்கிய காரணம் ஷேக் ஜரா சொத்துத் தகராறு. இது கிழக்கு ஜெருசலேம் சுற்றுப்புறத்திலிருந்து சுமார் 300 பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வழிவகுக்கும் என கூறப்படுகிறது.