ஹிந்து பெண் வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிவு?

இ காமர்ஸ் ஆடை நிறுவனமான ஜிவாமே (Zivame) தனது ஹிந்து மற்றும் முஸ்லிம் வாடிக்கையாளர்களின் தகவல்களை பல முஸ்லிம் ஆதிக்கக் குழுக்களுக்கு கசியவிட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கசியவிடப்பட்ட விவரங்களில் வாடிக்கையாளர்களின் பெயர், அலைபேசி எண், முகவரி மற்றும் ஆர்டர் விவரங்கள் அடங்கும். அறிக்கைகளின்படி, அவர்கள் 1.5 மில்லியன் ஹிந்து பெண்களின் விவரங்களைப் பகிர்ந்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் சமூக ஊடக பயனரான ‘சைபர் ஹன்ட்ஸ் ஜிவாமே’ மூலம் முதலில் தெரிவிக்கப்பட்டது, அந்த நிறுவனம் ஹிந்து பெண் வாடிக்கையாளர்களின் தகவல்களை பல முஸ்லிம் ஆதிக்க குழுக்களுக்கு கசியவிட்டதாக அது வெளிப்படுத்தியதுடன் அதன் தரவுகளின் சில ஸ்கிரீன் ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், “எல்லா விவரங்களும் ஏற்கனவே முஸ்லிம்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன. உங்கள் பாதுகாப்பற்ற சர்வர்களால் ஹிந்து பெண்கள் பாதிக்கப்பட வேண்டுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். அதேசமயம் மற்றொரு பயனாளரான லேக்ஹாக் அனுராக் (LekhakAnurag), “யாரோ ஒருவர் ஜிவாமேயின் பாதுகாப்பு வழிமுறைகளை மீறி வாடிக்கையாளர்களின் (பெரும்பாலும் பெண்களின்) பெயர்கள், தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகள் உள்ளிட்ட தரவுத்தளத்தை டார்க் வெப்பில் விற்பனைக்கு வைத்துள்ளார். பெண்களால், பெண்களுக்காக பிராண்ட் இருந்தால், பெண்களின் பாதுகாப்பில் ஏன் சமரசம் செய்ய வேண்டும்? இருப்பினும், அந்த நிறுவனத்திடம் இருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை.வ் ஸ்பேம் அழைப்புகள், செய்திகள் மற்றும் மோசடி செய்பவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என தெரிவித்துள்ளார். ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை கவர முஸ்லிம் ஆண்கள் எப்படியெல்லாம் மூளைச்சலவை செய்கிறார்கள் என்பதில் ஒருசில விஷயங்களை கூறும் ‘தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகியுள்ள இந்த சூழலில், ஹிந்து பெண்களின் பாதுகாப்பு குறித்து இன்னும் உறுதி செய்யப்படாத இந்த சமீபத்திய தகவல்கள் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிவாமே என்பது பெண்களின் ஆடைகளை விற்கும் ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமாகும். இது 2011ல் ரிச்சா கர் என்ற பெண் ஒருவரால் நிறுவப்பட்டது. ரிலையன்ஸ் ரீடெய்ல் 2020ல் இதன் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது.