வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு

பா.ஜ.கவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கன்னையா லால் கொல்லப்பட்டார். கைது செய்யப்பட்ட முகமது கௌஸ் மற்றும் முகமது ரியாஸ் என்ற அந்த கொடூர கொலையாளிகள் நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்காக அவர்கள் சிறிதும் வருந்தாமல் இருந்தனர். நீதிமன்ற வளாகத்தில் இருந்த பல வழக்கறிஞர்கள் கொலையாளிகள் இருவருக்கும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவர்களை ஏற்றிச் சென்ற காவல்துறை வாகனத்தை துரத்திச் சென்றனர். இந்த பயங்கரவாதிகள் 14 நாட்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், உதய்பூரில் உள்ள வழக்கறிஞர்கள், ‘இருவரும் செய்த செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இது சாதாரணமான விஷயம் அல்ல. அவர்கள் சமூகத்தில் மட்டுமல்ல, பிரதமருக்கும் பயங்கரவாதத்தை பரப்ப முயற்சிக்கிறார்கள். எந்த வழக்கறிஞரும் அவர்களுக்காக ஆஜராக மாட்டார்கள்’ என்று தெரிவித்தனர். மேலும், அவர்களை தூக்கிலிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். முன்னதாக, பா.ஜ.க தலைவர் கஜேந்திர சிங் ஷெகாவத், கன்னையா லால் பாதுகாப்பு கோரி பதிவு செய்த வழக்கை புறக்கணித்ததற்காக காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு மற்றும் காவல்துறையை கடுமையாக சாடியிருந்தார். ‘ராஜஸ்தான் மாநிலம் ஊழலின் மையமாக மாறியுள்ளது. முன்பு அமைதிக்கு பெயர் பெற்ற மாநிலம், தற்போது துஷ்பிரயோகம் செய்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை பாதுகாக்கும் கெலாட் அரசை ராஜஸ்தான் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்’ என்று கூறினார். கன்னையா லாலின் குடும்ப உறுப்பினர்களும் மாநில அரசை கடுமையாக சாடியதுடன், ‘இந்த மாநில அரசு ஹிந்துக்களுக்கானது அல்ல, முஸ்லிம்களுக்கானது. தினமும் ஹிந்துக்கள் கொல்லப்படுகிறார்கள் ஆனால் யாரும் அவர்களின் பேச்சைக் கேட்பதில்லை. ஆனால், முஸ்லிம்களுக்கு சிறியதாக ஏதாவது நேர்ந்தால்கூட, அரசு அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது’ என்று குற்றம் சாட்டியிருந்தனர்.