கிறிஸ்தவ மதமாற்ற கொடுமையால் உயிரிழந்த பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கை சி.பி.ஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (என்.சி.பி.சி.ஆர்) கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்று உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், இவ்வழக்கை நேரில் சென்று விசாரித்த என்.சி.பி.சி.ஆர், அதன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அனுமதி அளித்துள்ளது. என்.சி.பி.சி.ஆர் தலைவர் பிரியங்க் கனூங்கோ தலைமையிலான குழு, காவல்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகம், தொழிலாளர்கள், லாவண்யாவின் பெற்றோர், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசாரணை நடத்தியது. அதில் பள்ளியின் தரப்பில் செய்யப்பட்ட பல்வேறு முறைகேடுகளையும் குளறுபடிகளையும் கண்டறிந்து வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.