ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவரும் பிஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மீது சி.பி.ஐ புதிய ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது. லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் ரயில்வே வேலைகளை வழங்குவதற்காக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதனையடுத்து பீகாரில் லாலு பிரசாத் யாதவ் சம்பந்தப்பட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. லாலு பிரசாத் யாதவ் மட்டுமல்லாது அவரது மகள் மிசா பாரதி உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.