குன்னக்குடி வைத்தியநாதன் நினைவுநாள்

வில்லுக்கு விஜயன் எனும் சொல்லுக்கு ஏற்றாற்போல் குன்னக்குடி என்றால் வயலின் வயலின் என்றால் குன்னக்குடி என்னும் அளவிற்கு வரலாற்றில் இடம் பிடித்துள்ள ஈடு இணையற்ற அற்புதமான வயலின் கலைஞர் .அவர் வயலின் பேசும் அவர் வயலின் பாடும் அவர் வயலின் மிமிக்கிரி செய்யும் தன்னை ஒரு வயலின் வித்வானாக அறிமுகப்படுத்திக் கொண்ட அவர் மிகச்சிறந்த இசையமைப்பாளர் ஆவார் அதுமட்டுமின்றி பாடகர் நடிகர் திரைப்பட தயாரிப்பாளர் இசை ஆராய்ச்சியாளர் திருவையாறு தியாகராஜ வித்வத் சபையின் தலைவர் என பன்முகத்தன்மை கொண்டவர் அவர் தடம் பதித்த அனைத்து துறைகளிலுமே தனது பெயரை நிலை நாட்டியவர். 1983 மற்றும் 84 ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகப்பெரிய பஞ்சத்தை சந்தித்திருந்தது சரியான மழை இல்லாத காரணத்தினால் நிலத்தை உழுவதற்கும் குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டது இந்த நிலையில் தமிழ்நாடு அரசும் தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருந்தது கடைசியில் சென்னைக்கு அருகே உள்ள புழலேரியில் மிகப்பெரிய இசை கச்சேரியினை ஏற்பாடு செய்திருந்தது நம்பிக்கையோடு குன்னக்குடி ஒருவர் மட்டும் அந்த இடத்திற்கு சென்று மேயர் அஞ்சலி ஜனார்தவம் அமிர்தவர்ஷினி ஆகிய ராகங்களை தொடர்ந்து இரண்டு மணி நேரம் வாசித்தார் அன்று மாலையே மழை பொழிந்தது அதனை அனைத்து செய்தித்தாள்களும் அன்றே செய்தி வெளியிடப்பட்டது இந்த செய்தி உலக செய்தி ஆகி பல நாடுகளிலும் இந்த நிகழ்வை பாராட்டினர் இது போன்ற இசை யாகத்தையும் நடத்தி வெற்றி கண்டுள்ள இசையின் பேரரசர் கர்நாடக இசைக்கு பக்க வாத்தியமாக இருந்த வயதினை தனி வாத்தியமாக பிரபலம் அடையச் செய்வதற்கு திறவுகோலாக இருந்தவர். முதன் முதலில் வயலினில் திரை இசை பாடல்களை வாசித்து குறுந்தகடு வெளியிட்டவர் 1967ஆம் ஆண்டு முதல் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக வாசிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டு மாற தனிக் கச்சேரி ஆகவே வயலின் வாசிக்க முடிவு செய்தார் கடின உழைப்பு மற்றும் தனது தொலைநோக்கு சிந்தனையினாலும் வயலினில் பல புதிய யுத்திகளை மேற்கொண்டு அதே சமயம் பல புதிய நடைகளைக் கொண்டும் வளர்ச்சி பாதையில் செல்ல நினைத்தால் பொதுமக்களின் உதவியுடன் மென்மையான பாடல்களை வாசித்து வெற்றியும் கண்டார் கேட்போரின் விருப்பத்திற்கு ஏற்ப வாசித்தலையும் அவர்களின் எண்ணங்களையும் தன்னுடைய உயரிய லட்சியமாகவும் கொள்கையாகவும் கொண்டிருந்தார் மேலும் அவரது வாசிப்பின் மூலம் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மக்களை ஒன்று திரட்டி தேசிய ஒருமைப்பாட்டிற்கு வழி வகுத்தார் கர்நாடக இசைக் கலைஞர்களில் பலர் இசைக்கலைஞர்கள் நிறைந்த சபையிலும் குறிப்பிட்ட சில இடங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி தத்தம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கர்நாடக இசையினை கிராமப்புறங்களுக்கும் சென்று மக்கள் விரும்பும் வண்ணம் இசையால் அவர்களுக்கு இன்பத்தை கொடுத்ததோடு வயலின் வாசிக்கும் திறனால் அவை அனைத்தையும் தன தாக்கி கொண்டார்.
-தினேஷ்