சென்னை மயிலாப்பூர் பேயாழ்வர் தேவஸ்தான கோயில் அறங்காவலர் ஸ்ரீதரனை தற்காலிகமாக நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கோயில் நிலத்தை அபகரித்தவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தை ஆக்கிரமித்தவர்கள், தாமாக முன்வந்து ஹிந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்க ஏதுவாக விளம்பரம் வெளியிட வேண்டும். கோயில் நிலம், சொத்து, நகையை மீட்கும் நடவடிக்கையை கண்காணிக்க சிறப்பு பிரிவை ஏற்படுத்த வேண்டும். சிறப்பு பிரிவுக்கான தொலைபேசி, மொபைல் எண்களை கோயில்கள் மற்றும் அலுவலகங்களில் வைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் ஸ்ரீதரன் நீக்கத்தையும் ரத்து செய்யவும் அதே சமயம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.