புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி, கோவையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஹிந்துக்கள் சிறுபான்மையாக வசிக்கும் வங்கதேசம் உட்பட பல நாடுகளில் ஹிந்துகளின் வழிபாட்டு தலங்கள் மீதும் ஹிந்துக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகின்றது. வங்க தேசத்தில் 60 ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்துகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதும் இடம் பெயர்வதும் தொடர்கின்றது. 28 சதவீதமாக இருந்த ஹிந்துகளின் எண்ணிக்கை தற்போது 8 சதவீதமாக அங்கு குறைந்துள்ளது. ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படு்ம் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும். எனவே, வங்கதேச வன்முறைகளை கண்டித்து, வரும் 27 ம் தேதி ஒருமித்த கருத்துடைய இயக்கங்களை ஒன்று சேர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என கூறியுள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் வடமாநில ஊடங்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழக ஊடகங்கள் கொடுக்க வில்லை எனவும் குற்றம்சாட்டினார்.