ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி முழுக்க முழுக்க பாரதத்தில் உருவானது. தென் அமெரிக்க நாடான பிரேசிலில் இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டிடம் ஏற்கனவே அனுமதி கோரப்பட்டிருந்தது. சில காரணங்களால் அந்த கோரிக்கையை நிராகரித்த, பிரேசில் அரசின் தேசிய சுகாதார ஒழுங்கு முறை அமைப்பான அன்விசா, தற்போது அதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, முதற்கட்டமாக 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் பிரேசிலுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.