கிசான் ரயில்கள்

பழங்கள், காய்கறிகள், இறைச்சி, கோழி, மீன், பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை உற்பத்திப் பகுதிகளில் இருந்து நுகர்வுத் தேவை உள்ள பகுதிகளுக்கு விரைவாக கொண்டு செல்ல ரயில்வே அமைச்சகம், ‘கிசான் ரயில்’ சேவையை அறிமுகப்படுத்தியது. கிசான் ரயில்களை இயக்கத்திற்கு முன்னுரிமை, குறைந்த செலவு, தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு இலவச சேவை என இருப்பதால் இந்த ரயில்கள் மூலம் விவசாயிகளும் உணவு பொருட்கள் உற்பத்தியாளர்களும் பயன்பெறுகின்றனர். இந்நிலையில், மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘ஏறக்குறைய 1,586 கிசான் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதில் தோராயமாக. 5.2 லட்சம் டன் அளவிலான பழங்கள், காய்கறிகள் உட்பட அழுகக்கூடிய உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன’ என தெரிவித்தார்.