காலிஸ்தானி பயங்கரவாதம் ஆபத்தானது

இங்கிலாந்தில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் சமீபத்திய வன்முறைகள் அதிகரிப்பு பிரிட்டனுக்கு பாதுகாப்பு சவால்களை உருவாக்கியுள்ளது. அதே போல அந்த நாட்டில் சீக்கியர்களை தீவிரமயமாக்கும் சீக்கிய பயங்கரவாதிகளின் ஒரு பிரிவான காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்பாடுகள் அங்கு சமீபத்தல் எழுச்சியை கண்டுள்ளது. இது குறித்து  ஐரோப்பிய தீவிரமயமாக்கல் பார்வை(EER) என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்கள் பலருக்கு, பயங்கரவாதத்தை கடுமையாக எதிர்க்கும் சமூகத்தில் கூட, காலிஸ்தான் பயங்கரவாதிகள் குறித்த தெளிவு குறைவாகவே உள்ளது. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மிகவும் தெளிவற்றவர்களாக உள்ளனர். ஆனால் உண்மையில், இது சமூக மற்றும் பாதுகாப்புக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனை மிகப்பெரிய ஒரு சர்வதேச வலையமைப்பு இயக்குகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும், “காலிஸ்தானி பிரிவினைவாதிகள், பிரிட்டனில் உள்ள சீக்கியர்கள் தாங்கள் ஒரு இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக நம்ப வைப்பதற்கு ஊக்கமளிக்கும் வகையில், ஒரு கருத்தியல் மற்றும் சதிக் கோட்பாடு கதைகளின் தொகுப்பை பிரச்சாரம் செய்து வருகின்றனர், இதனால் இத்தகைய வன்முறைகள் தற்காப்புக்கானது என அவர்கள் நியாயப்படுத்த முயல்கின்றனர். இத்தகைய செயல்பாடு சீக்கியர்களுக்கு மிகவும் ஆபத்தானது. சீக்கிய இளைஞர்கள் உள்ளிட்டவர்களை பயங்கரவாதம் மற்றும் குற்றச்செயல்களுக்குள் இழுக்கும் அபாயம் இதில் உள்ளது. சமூகங்களுக்கு இடையேயான பிளவுகளை உருவாக்கி பரந்த சமுதாயத்தை ஆபத்தில் ஆழ்த்தும் ஆபத்தும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.