காலிஸ்தானிகள் தலைமையில் நடைபெறும் விவசாய போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள கூலித் தொழிலாளர்களும், கமிஷன் ஏஜெண்டுகளும் தற்போது சட்டவிரோதமாக, தங்களின் தங்கும் இடங்களை, இரண்டடுக்கு கொண்ட நிரந்தர வீடுகளாக மாற்றிவருகின்றனர். ‘இந்த வீடுகளின் எண்ணிக்கை தற்போது நான்காக இருந்தாலும் விரைவில் இவற்றின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. கோடைக்கால வெப்பநிலை, கொசுக்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவே இந்த வீடுகள் கட்டப்படுகின்றன. மேலும் போராட்டம் நீடித்தால் அதற்காக எங்கள் முன்னேற்பாடுகள் வலுவாக இருக்க வேண்டும்’ என்று என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் (எஸ்.கே.எம்) ஊடகத்தொடர்பாளர் கரம்ஜித் சிங் கூறியுள்ளார்.
இந்நிலையில், ‘இந்த போராட்டம் காலிஸ்தானியர்களால் பிற்காலத்தில் வன்முறையாக மாற்றப்பட்டால் அப்போது இந்த நிரந்தரக் கட்டுமானங்கள், ஆயுதங்களைப் பதுக்க, பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அரணாக விளங்க ஏற்றதாக இருக்கும். பொதுமக்களுக்கும், தேச பாதுகாப்பிற்கும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்’ என அப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர்.