ராணுவத்திற்கு காதி பொருட்கள்

சுதேசி தயாரிப்புகளை பயன்படுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் (KVIC) இந்தோ திபெத் எல்லைக் காவல் படை, பி.எஸ்.எப், சி.எஸ்.ஐ.எப், எஸ்.எஸ்.பி உள்ளிட்ட துணை ராணுவப் படைகளிடம் இருந்து ரூ. 10 கோடி மதிப்புள்ள 1.91 லட்சம் காதி பருத்தி விரிப்புகளை சப்ளை செய்ய ஆணை பெற்றுள்ளது. இந்த பருத்தி விரிப்புகள் 1.98 மீட்டர் நீளம் 1.07 மீட்டர் அகலத்துடன் நீல நிறத்தில் இருக்கும். உத்தரபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாபின் காதி நிறுவனங்களால் தயாரிக்கப்பட உள்ளது. கே.வி.ஐ.சி தலைவர் வினய் குமார் சக்சேனா, ‘உள்துறையின் இந்த உத்தரவு காதியையும் அதன் உயர்தரத்தினையும் படையினர் மத்தியில் பிரபலப்படுத்தும்’ என கூறினார்.  ஏற்கனவே, காதி ஆணையம் ராணுவத்தினர் உணவு பயன்பாட்டிற்கு கடுகு எண்ணெயை அதிக அளவில் வழங்கி வருகிறது.