கேரளா ஸ்டோரி டிரெய்லர் வெளியீடு

மக்கள் பல காலமாக எதிர்பார்த்து வந்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த படம், கேரளாவை இஸ்லாமியமயமாக்கும் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளின் சதி, ஹிந்து மற்றும் கிறிஸ்தவ பெண்களை லவ்ஜிஹாத் வலையில் வீழ்த்தி அவர்களை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு கடத்தும் அச்சுறுத்தும் திட்டத்தை விவரிக்கிறது. ஷாலினி உன்னிகிருஷ்ணன் என்ற ஹிந்துப் பெண், பாத்திமாவாக மாறி, சிரியா மற்றும் ஏமனில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதியாகப் பயிற்சி பெறுவதற்காகக் கடத்தி வரப்பட்ட பயணத்தை அதன் டிரெய்லர் விவரிக்கிறது. ‘கடவுளின் சொந்த நாடு’ என அழைக்கப்படும் கேரளாவின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கிய இந்தத் திரைப்படம், பாரதத்தின் தென் மாநிலமான கேரளாவில் மூளைச்சலவை செய்யப்பட்டு, ஏமாற்றி, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, தீவிரமயப்படுத்தப்பட்டு, பாரதத்திலும் உலக நாடுகளிலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுத்த தயார்படுத்தப்பட்ட பெண்களின் உண்மை கதைகளை அடிப்படையாகக் கொண்டது. இப்படி ஒன்று இரண்டு அல்ல சுமார் 32,000 பெண்கள் காணாமல் போன சம்பவங்களின் பின்னணியில் உள்ள அதிர்ச்சியான உண்மைகளை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. இந்த 2.45 நிமிட டிரெய்லர், ஹிந்து பெண்களை லவ் ஜிஹாத்தில் சிக்க வைத்து அவர்களை மதமாற்றம் செய்து கேரளாவை முஸ்லிம் நாடாக மாற்ற மௌலவியும் சில முஸ்லிம் பயங்கரவாதிகளும் எப்படி திட்டமிடுகின்றனர் என்பதை காட்டுகிறது.

சில முஸ்லீம் ஆண்கள், பெண்களுடன் உறவுகொள்ள மற்றவர்களைத் தூண்டி பின்னர் அவர்களை ஒப்படைப்பதையும் பின்னர் நடைபெறும் மத மாற்றம், திருமணம் மற்றும் கடத்தப்படுவதையும் டிரெய்லர் விவரிக்கிறது. கேரளாவில் வசிக்கும் சாதாரண பெண்களை ஐ.எஸ் பயங்கரவாதிகளாக மாற்றும் இத்தகைய பயங்கர விளையாட்டுகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற முஸ்லிம் அடிப்படைவாத மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் மற்ற கூட்டணி அமைப்புகளின் செயல்பாடுகள் காரணமாக அதிகரித்து வரும் பயங்கரவாதம், வளைகுடாவிற்கு பெண்களைக் கடத்துவது, கேரளாவில் தீவிர இஸ்லாமியமயமாக்கல் எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை வெளிப்படுத்துவதே இந்த டிரெய்லரின் நோக்கமாகும். பாரதத்துக்கும் ஹிந்துக்களுக்கும் எதிராகத் தீட்டப்பட்ட ஒரு ஆபத்தான சதியை வெளிப்படுத்தும், இதுவரை சொல்லப்படாத உண்மைக் கதையைப் பார்க்கத் தயாராகுங்கள். இப்படம் மே 5ம் தேதி வெளியாகவுள்ளது.