ஊழியர்கள் பற்றி கவலைப்படாத கேரளா

கொச்சி (விஎஸ்கே). கேரள அரசு தனது குடிமக்களுக்கான ஊழியர் மாநிலக் காப்பீடு கார்ப்பரேஷன் (இஎ.ஸ்.ஐ) வசதிகளைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக இ.எஸ்.ஐ வாரியக் கூட்டங்களில் கேரள அரசு பங்கேற்கவில்லை. நாட்டின் பிற மாநிலங்கள் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்கின்றன, தங்கள் மாநில ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. ஆனால் இடதுசாரிகள் ஆளும் கேரளா அனைத்து கூட்டங்களையும் புறக்கணிக்கிறது. கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் சந்திப்புகளைக் கூட கேரளா புறக்கணித்தது. இதனால் கேரள தொழிலாளர்கள் தான் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சண்டிகரில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் தலைமையில் இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற கூட்டத்திலும், வழக்கம் போல் கேரளா பங்கேற்கவில்லை. கேரளாதான் அதிக இ.எஸ்.ஐ திட்டங்களைக் கொண்ட மாநிலம். கேரளாவில் 12 மருத்துவமனைகள், 140க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மற்றும் பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. அதே நேரத்தில், பயனாளிகள் போதுமான மருத்துவர்கள், தொடர்புடைய பணியாளர்கள் மற்றும் சரியான மருந்துகள் இல்லாமல் அவதிப்படுகிறார்கள். மாநிலத்தில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள வசதிகள் கூட இல்லை. மருத்துவமனைகளுக்கு 240 டாக்டர்கள் தேவை என்ற சூழலில், 105 பேர் மட்டுமே உள்ளனர். துணை மருத்துவ பணியாளர்களின் மொத்த எண்ணிக்கை 201, தேவையோ 234. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தொழில் பகுதியான பெரும்பாவூருக்கு 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை திட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான நிலத்தை மாநில அரசு இன்னும் கண்டு பிடிக்கவில்லை. சி.பி.எம் மேலாதிக்கம் கொண்ட பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி, தங்களின் ஆட்சி பாட்டாளி வர்க்கத்துக்கான ஆட்சி என்று அவ்வப்போது கூறிக் கொள்கிறது. ஆனால் உண்மை நிலை என்னவோ இதுதான்.