காசி உத்சவ்

வாரணாசியின் ருத்ராக்ஷ் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மாநாட்டு மையம் நவம்பர் 16 முதல் 18 வரை காசியின் உன்னதமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் ‘காசி உத்சவ்’ நிகழ்ச்சியை நடத்துகிறது. பாரதத்தின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய கலாச்சார அமைச்சகம் ,அற்றும் உத்தர பிரதேச அரசின் ஆதரவுடன் ‘காசி உத்சவ்’ நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புகழ்பெற்ற கோஸ்வாமி துளசிதாஸ், சந்த் கபீர், சந்த் ரைதாஸ், பரதேந்து ஹரிஷ்சந்திரா, முன்ஷி பிரேம்சந்த் மற்றும் ஸ்ரீ ஜெய்சங்கர் பிரசாத் ஆகிய மகான்களை போற்றும் வகையில். ‘காஷி கே ஹஸ்தக்ஷர்’, ‘கபீர், ரைதாஸ் கி பானி அவுர் நிர்குன் காஷி’ மற்றும் ‘கவிதா அவுர் கஹானி – காஷி கி ஜுபானி’ என ஒவ்வொரு நாளும் ஒரு கருப்பொருளை மையமாக வைத்து திருவிழா நடத்தப்படுகிறது. மேலும், குழு விவாதங்கள், கண்காட்சிகள், திரைப்படத் திரையிடல்கள், இசை, நாடகம் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சியில் பிரபல கலைஞர்களும் கலந்து கொள்கின்றனர்.