ராமநாதபுரம் லாட்ஜில் காஷ்மீர் முஸ்லிம்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் புது பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த 5 ஜம்மு காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் உட்பட 27 வட மாநிலங்களை சேர்ந்தவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரம்ஜானை முன்னிட்டு பல மாநிலங்களுக்கு சென்று ‘ஜக்காத்’ என்ற பெயரில் நிதி வசூல் செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான ஆவணங்கள், நிதி வசூல் செய்ததற்கான ரசீது புத்தகங்கள் இருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘ஒரு மாநிலத்தில், ஒரு ஊரில் உள்ள முஸ்லிம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வெளியூருக்கு ஜக்காத் வசூல் செய்ய வருவார்கள். ஆனால், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து, ஜக்காத் வசூல் செய்ய தமிழகத்தை அதிலும் குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தை தேர்ந்தெடுத்த காரணம் என்ன? இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கலாம். காஷ்மீரில் பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காஷ்மீர் இளைஞர்கள் நிதி வசூல் செய்வது காவல்துறை கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டிய விஷயம். அதனால் தேச பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் செய்யாமல் முறையாக விசாரணை செய்ய வேண்டும்’ என இந்து முன்னணி சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.