கர்நாடக காங்கிரஸ் புலம்பல்

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரம் சூடி பிடிக்கத் தொடங்கியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க இணை பொறுப்பாளராக தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். கர்நாடகவில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெரும் என பெரும்பாலான ஊடகங்கள் கூறிவந்தன. ஆனால், அண்ணாமலை அங்கு அவர் பிரச்சாரம் செய்யத் துவங்கியதும் காட்சிகள் மாறின. அவருக்கு மக்களிடம் கிடைத்த மாபெரும் வரவேற்பு, கூடும் அபரிமிதமான கூட்டங்கள், அவரது பேச்சு ஆகியவற்றை பார்த்த ஊடகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொண்டன. கர்நாடகவில் பா.ஜ.க மீண்டும் அமோக வெற்றி பெரும் என கூறத் துவங்கி விட்டன. இதனால், காங்கிரஸ் கட்சி பெரிதும் கலக்கமடைந்து உள்ளது. எனவே, அண்ணாமலையை பிரச்சாரத்தில் இருந்து ஓரம் கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக, கர்நாடக காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் நாகராஜ் கவுடா, தேர்தல் ஆணையத்தின் மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒரு கடிதம் வழங்கியுள்ளார். அதில், “தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க நட்சத்திர பேச்சாளராகவும், சட்டசபை தேர்தல் கர்நாடக பா.ஜனதா இணை பொறுப்பாளராகவும் உள்ளார். அவர் கர்நாடகத்தில் முன்பு ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல பொறுப்புகளில் பணியாற்றியவர். அப்போது அவருக்கு கீழ் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள் பலர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அண்ணாமலை, தனது இந்த செல்வாக்கை பயன்படுத்தி பா.ஜ.க வேட்பாளர்களூக்காக காவல் அதிகாரிகளுக்கு அவர் அழுத்தம் கொடுக்கிறார். அவர் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு பணம் மற்றும் ஆட்களை மாநிலம் முழுவதும் அனுப்புவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் முன்னாள் காவல் அதிகாரி என்பதால் அவரது வாகனத்தை அதிகாரிகள் சோதனை செய்வதில்லை. மேலும், அவர் காங்கிரசின் சில தலைவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடத்த வைப்பேன் என்று மிரட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்லது. அவரின் செயல்பாடுகள் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை பாதிக்கும் வகையில் உள்ளது. அதனால் கர்நாடகத்தில் சட்டசபை தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதை உறுதி செய்ய அண்ணாமலை தேர்தல் பிரசாரம் செய்யவோ அல்லது கர்நாடகத்தில் தங்கவோ தடை விதிக்க வேண்டும்” என புலம்பியுள்ளார்.