கரீனா கபூர் விளம்பரம் நிறுத்தம்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குறித்த ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட விளம்பரத்தில், ஹிந்தி நடிகை கரீனா கபூர் நடித்திருந்தார். முன்னதாக, கத்துவா வழக்கு குறித்து முழுவதுமாக அறிந்துகொள்ளாமல், ஒருசார்பாக டுவிட்டரில் கருத்து பதிவிட்ட கரீனா, ‘நான் ஒரு இந்தியர் என கூற வெட்கப்படுகிறேன்’ என கூறியிருந்தார். நாட்டை இழிவுபடுத்தும் கரீனாவை எப்படி அதில் நடிக்க அழைக்கலாம் என கேட்டு, நெட்டிசன்கள் பலர் கடும் கண்டனம் எழுப்பினர். பா.ஜ.க தலைவர் கபில் மிஸ்ராகூட இதற்கு கண்டனம் தெரிவித்தார். இதனை அடுத்து, அந்த விளம்பரத்தை ஆயுஷ் அமைச்சகம் திரும்பப் பெற்றது.