சமூக ஊடகத்தில் சர்ச்சைக்குரியப் பதிவு இட்டார் எனக்கூறி குஜராத்தைச் சேர்ந்த கிஷன் பர்வத் பொலியா என்ற இளைஞர் முஸ்லிம் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை சம்பந்தமாக சபீர், இம்தியாஸ் பதான், மௌலானா முகமது அயூப் ஆகியோரை குஜராத் காவல்துறை கைது செய்துள்ளது. இவ்வழக்கில் மௌலானா முகமது அயூப் தான் சதித்திட்டம் தீட்டியவர், கொலைக்கான ஆயுதங்களை ஏற்பாடு செய்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலைச் சதியில் ஈடுபட்ட மும்பையைச் சேர்ந்த மற்றொரு மௌலானாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நீதி கோரியும் அகமதாபாத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கடையடைப்பு நடத்தியது.
இது சம்பந்தமாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “கிஷன் பர்வாத் கொலையை ஒரு மசூதியாலும், மௌல்வியாலும் திட்டமிடப்பட்டுள்ளது. கடவுளின் பெயரால் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும். நாம் ஏதோ இடைக்காலத்தில் வாழவில்லை. இதுபோன்ற கொலைகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 27 வயதான கிஷனுக்கு இரண்டு மாத பெண் குழந்தை உள்ளது. அவர் தனது பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கும்படி கோரப்பட்டார், கிஷனும் அதை செய்தார். எனினும் அவரை நான்கு பேர் சுட்டுக் கொன்றனர். அவர் ஒரு தியாகி. அவர் அனைவரின் சுதந்திரத்திற்காக இறந்தார், இந்த தேசத்தை ஆப்கானிஸ்தானாக மாறுவதைத் தடுப்பவர்கள் அத்தகையவர்கள். அவரது மனைவிக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில், கிஷன் கொலையில் ‘மனிதநேயவாதிகள்’ என்று அழைக்கப்படுபவர்களின் மௌனம் குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கங்கனா ரனாவத் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் இதே பிரச்சினை குறித்து எழுத்தாளர் ஆனந்த் ரங்கநாதனின் இடுகையான “கடவுளின் பெயரால் நம்பமுடியாத கொடுமை!!! கிஷனின் முகநூல் இடுகையால் புண்பட்டதாக கடவுள் அவர்களிடம் சொன்னாரா? ஒரு முகநூல் பதிவினால் மனம் புண்பட்டு, அதற்கான மன்னிப்பும், வருத்தமும் கேட்கப்பட்டும் அதனை ஏற்காத கடவுளை ஏன் வணங்க வேண்டும்! அவமானம்!” என்ற பதிவையும் இணைத்துள்ளார்.