கனல் கண்ணனின் அதிரடி ஜாமீன் மனு

திரைப்படங்களில் அதிரடி சண்டை காட்சிகளுக்கு பெயர் பெற்ற கனல் கண்ணன், இந்து முன்னணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள ஈ.வே. ராமசாமியின் சிலையை அகற்ற வேண்டும் என அவரது பாணியில் குறிப்பிட்டார். இதற்கு திராவிட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. கனல் கண்ணனை கைது செய்யவேண்டும் என்றனர். கனல் கண்ணனை கைதுசெய்ய அவரது வீட்டின் முன்பு மப்டியில் காவல்துறையினர் காத்திருந்தனர். கனல் கண்ணனுக்கு ஆதரவாக இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகளும் பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்தனர். இந்த சூழலில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கனல் கண்ணன் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் தரிசிக்க வரும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் வாசலில், கடவுளை கொச்சைபடுத்தும் வகையிலான வாசகங்களுடன் வைக்கப்பட்டிருக்கும் சிலையும், அந்த வாசகங்களும் பக்தர்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. அதனால்தான் அந்த சிலையை இடிக்க வேண்டுமென பேசினேன். நான் பேசியதில் இந்திய சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை. சிலையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம். கோயில் வாசலில் கடவுளை இழிவுபடுத்தும் விதமாக ஈ.வே.ரா சிலையை வைத்தது தவறு. ஶ்ரீரங்கம் கோயில் முன் சிலை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை; என் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. சிவபெருமானை அவதூறாக பேசி ஹிந்துக்களின் நம்பிக்கைகளை புண்படுத்திய ‘யூ டூ புரூட்டஸ்’ மீதும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால், துரதிஷ்டவசமாக என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது” என மனுவில் குறிப்பிட்டுள்ளார். ஜாமின் மனு மீதான விசாரணை ஓரிரு நாளில் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கனல் கண்ணனை கைது செய்ய வலியுறுத்திய திராவிட அமைப்புகள், இப்போது ராமசாமி சிலையை கோயில் வாசலில் நிறுவியது, அதில் இடம்பெற்று இருக்கும் வாசகங்கள் வரை நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.