சேலத்தில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம்வரை இயக்கப்பட்ட தமிழக அரசு பேருந்தை கடந்த 2005ல் கடத்தினான் கேரளாவை சேர்ந்த கே.ஏ. அனமூப் என்ற பயங்கரவாதி. மேலும் கோயம்புத்தூர் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருந்த பி.டி.பி தலைவர் அப்துல் நாசர் மதானியை விடுவிக்கவும் கோரிக்கை வைத்தான். பிறகு அந்த பேருந்தை தீ வைத்து எரித்தான். கமலாச்சேரி பேருந்து எரிப்பு வழக்கு என அழைக்கப்பட்ட இவ்வழக்கு விசாரணை தேசியப் புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனை விசாரித்த என்.ஐ.ஏ, இவ்வழக்கில் அனுமூப் உள்ளிட்ட 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம், அனுமூப்பிற்கு 6 ஆண்டுகள் கடுங்காவல்; சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,60,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்து உள்ளது.