கோயில் வடிவிலான கேக் வெட்டிய கமல்நாத்

மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும்மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ‘கோயில் வடிவிலான’ கேக்கை வெட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கமல்நாத், காவி கொடியுடன் கூடிய ஒரு நான்கு அடுக்கு கொண்ட ஹனுமான் கோயிலை போன்று தயாரிக்கப்பட்ட கேக் வெட்டி தனது பிறந்த நாலை கொண்டாடும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதையடுத்து சமூக ஊடக பயனாளர்களும் பல அரசியல் தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை கண்டித்துள்ள மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான், ​​“இவர்களுக்கும் கடவுள் பக்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்த காங்கிரஸ் கட்சி, அதனால் அவர்கள் வாக்குகளை இழப்பதைக் கண்டதும் அவர்களுக்கு ஹனுமான் நினைவு வரத் தொடங்கியது. ஹனுமானை கேக்கில் வரைந்து, அதை வெட்டுவது சனாதன மரபுகளை அவமதிக்கும் செயல் இல்லையா? இது ஹிந்து தர்மத்தை இழிவுபடுத்தும் செயலாகும், இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறினார். பா.ஜ.க தலைவர் அமித் மாளவியா, “தேர்தல்களின் போது தன்னை ஹனுமான் பக்தன் என்று கூறிக் கொண்ட கமல்நாத், இப்போது கோடிக்கணக்கான ஹிந்துக்களின் தெய்வத்தை இழிவுபடுத்தி அவமானப்படுத்துகிறார்…” என்று ட்வீட் செய்துள்ளார்.